Followers
Saturday, April 17, 2021
சுப்பிரமணியஞ் செட்டியார் குருகுலம்.
அக்காலத்தில் இப்படி ஒரு சட்டமா?
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தேவகோட்டை யூனியன் ஆபிசில் 1911ஆம் ஆண்டு பழ.ப.பிச்சப்ப செட்டியார் என்பவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள 'குழந்தை வேலன் செட்டி தெரு'வில் 30 அடி நீளத்திற்கும் 3அடி அகலத்திற்கும் உரிய இடத்தில் 31நாட்களுக்கு கட்டிட சாமான்களை வீதியில் போட்டு எடுத்துக் கொள்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். "கட்டிட சாமான்களை வீதியில்ப்போட்டு எடுத்துக்கொள்வதற்கு லைசென்சு" என்ற தலைப்பில் தேவகோட்டை யூனியன் ஆபிஸ் அக்கிராசனாதிபதி (தலைவர்) சில நிபந்தனைகளுடன் 26/07/1911அன்று உரிமம் வழங்கியுள்ளார். அதாவது மக்கள் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் கட்டிட சாமான்களை தெருவில் போட்டுக் கொள்ளளாம், இரவில் மக்கள் நடமாட போதுமான வெளிச்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதை தவறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் இப்படி ஒரு சட்டம் இருந்திருக்கிறது என்பது அனைவரையும் வியப்படைய செய்கிறது.
Subscribe to:
Posts (Atom)
"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"
க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...

-
- பழ.கைலாஷ் - செ ட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பலர் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள்,...
-
ஆகஸ்ட் புரட்சியில் தேவகோட்டை 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் 'இந்திய தேசிய காங்கிரஸ்' மாநாடு நடந்தது. அதில் பேசிய மகாத்மா க...