Followers

Showing posts with label நகரத்தார் அறப்பணிகள். Show all posts
Showing posts with label நகரத்தார் அறப்பணிகள். Show all posts

Friday, July 11, 2025

நகரத்தார் கல்வெட்டு

 ன்றைய(11/07/2025) தினத்தந்தி நாளிதழில் நகரத்தார் தொடர்பான 15 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வந்துள்ளது.


11/07/2025 தினத்தந்தி

இந்த கல்வெட்டு கண்டறியப்பட்ட "துவார்" என்னும் ஊரில் ஒரு காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வசித்துவந்தனர் என்று பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர் இங்கு வாழ்ந்த நகரத்தார்கள் வேறு சில ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர். இவ்வூர் நகரத்தார் வாழ்ந்த பழைய ஊர்கள் பட்டியலில் உள்ளது. இன்றும் இவ்வூரில் உள்ள வள்ளிலிங்கம் ஐயனாரை நகரத்தார் பலர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலுக்குள் அடைக்கம்மை ஆச்சி என்பவர் அடைக்கலம் ஆகியுள்ளார் அவருக்கு தனி சன்னதி உள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு மூலமாக தெரிய வருவது என்னவென்றால் 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வாழ்ந்து வந்த நகரத்தார் ஒருவர் வள்ளிக்கண்மாய் அருகே ஒரு ஊருணியை ஏற்படுத்தி உள்ளார். அதில் கல்வெட்டில், அவர் பெயரை பதிவு செய்துள்ளார். கல்வெட்டின் படி அவர் இளையாத்தங்குடி கோவில் கழனிவாசல் பிரிவை சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் சிவந்தகாலழகியார் என்றும் தெரியவருகிறது.

- பழ.கைலாஷ்

Friday, February 28, 2025

அமராவதிபுதூர் மழலையர் பள்ளி - 1939

          காரைக்குடி சீர்திருத்தச்செம்மல் சொ.முருகப்பா அவர்களால் 1938ல் காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் இளம் விதவைப்பெண்கள் மற்றும் கைவிடப்பட்டபெண்கள் முன்னேற்றத்துக்காக "மகளிர் இல்லம்" தொடங்கப்பெற்றது. அதில் பெண்களுக்கு கல்வியும் , கைத்தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சிலருக்கு மறுமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளது. 


இப்பெண்களின் குழந்தைகள் கல்வி கற்க மகளிர் இல்ல வளாகத்தினுள்ளே 1939-ல் ஒரு மழலையர் பள்ளி தொடங்கப்பெற்றுள்ளது. மழலையர் பள்ளி கட்டிடத்தை இலங்கை ஸ்ரீலஸ்ரீ விபுலானந்த சுவாமிகள் திறந்துவைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


பெண்கள் மறுமணம், கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக அயராது உழைத்த சொ.முருகப்பா பற்றி இன்று யாரும் பேசுவதில்லை. அறியப்படாத மனிதருள் ஒருவராய் உள்ளார்.


- பழ.கைலாஷ் 

Sunday, April 30, 2023

ஒரு நூறாண்டுக்கு மேல் பழமையான தேவகோட்டை கால்நடை மருத்துவமனை.


இந்த கால்நடை மருத்துவமனை கி.பி.1916ஆம் ஆண்டு தேவகோட்டை ஜமீந்தாரால் உருவாக்கப்பட்டு அன்றைய மெட்ராஸ் மாகாண ஆளுநரும் பாம்பன் பாலத்தை கட்டியவருமான லார்டு பெண்ட்லேண்ட் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

(இதன் அருகே தற்போது புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால் இது பராமரிப்பின்றி உள்ளது)

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...