Followers

Monday, March 30, 2020

காரைக்குடியில் ராஜேந்திர பிரசாத்

இராஜன்பாபு-வரவேற்புரை 


பாரதத்தின் முதல் ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் அவர்கள், 1935ல் காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த போது காரைக்குடிக்கு வருகை தந்திருந்தார். அப்போது காரைக்குடி மக்கள் அளித்த வரவேற்புரை இது, இயற்றியவர் தமிழ் கடல் இராய.சொ .

Friday, March 27, 2020

அரிக்கேன் விளக்கு

அரிக்கேன் விளக்கை ஏன் அரிக்கேன் விளக்கு என்று அழைக்கிறோம்?


எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு, ஒரு கதை உண்டு.

மின் விளக்குகள் பிரபலமாகாத காலத்தில், பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்ணாடி பொருத்தப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கை(Kerosene lamp) இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. அப்போது "இந்த விளக்கு சாதாரணக் காற்றில் மட்டுமல்ல ஹரிக்கேன் காற்றிலும் கூட அணையாது." என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஹரிக்கேன்(Hurricane) என்றால் சூறாவளி எனப் பொருள்.
இந்த விளம்பரத்தின் வெற்றியால்தான் நாம் மண்ணெண்ணெய் விளக்கை 'அரிக்கேன் விளக்கு' என்று அழைத்து வருகிறோம்.

Kailash PL

Saturday, March 21, 2020

சித்தாட்டிவயல் பிள்ளையார் கோயில்

சிவகங்கை மாவட்டம் 'உஞ்சனை'யை அடுத்துள்ள ஊர் 'சித்தாட்டிவயல்'.

இந்த சித்தாட்டிவயல் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் ஒரு பழமையான பிள்ளையார் கோவில் உள்ளது.
















ஒரு காலத்தில் இந்த ஊரில் நாட்டுக்கோட்டை செட்டியார்/நகரத்தார் சமூகத்தினர் சிலர் வாழ்ந்து வந்துள்ளனர்.

நகரத்தார்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் கட்டிய பிள்ளையார் கோவில் இன்று பராமரிப்பின்றி உள்ளது.

கருங்கல்,செம்பராங்கல் மற்றும் சுட்ட செங்கலால் கோவிலை கட்டியுள்ளனர்.
பிள்ளையார் சிலை மற்றும் மூஞ்சுறு சிலை தவிர்த்து மற்ற சிலைகள் திருடு போய்விட்டது.  கல்தூணின் இரண்டு செட்டியார்கள் சிலைகள் உள்ளன. சமீபத்தில் தான் பைரவர் சிலை திருடுபோனதாக கூறுகிறார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பிள்ளையார் சிலையை திருடிய ஒருவன், ஊர் எல்லையை கடக்கும் போது கண் குருடாகி கண்மாயில் விழுந்து இறந்து போனானாம்! பின்னர் ஊர் மக்கள் சிலையை மீட்டு கொண்டுவந்து வைத்துள்ளனர்.

செட்டியார்கள் யாராவது வந்து கோவிலை புணரமைத்து தரவேண்டும் என்பது இவ்வூர் மக்கள் விருப்பம்.

Kailash PL

உஞ்சனை மகா கணபதி கோயில்

உஞ்சனை சிவன் கோயில்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள 'உஞ்சனை'யில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் முன்புறம் சாத்தன் செட்டியார் மகன் சுப்பிரமணியன் செட்டியாரால் சுமார் 700 ஆண்டுகட்கு முன்பு செம்பூரான் கற்களினால் கட்டப்பட்ட பிள்ளையார் கோயில் ஒன்றுள்ளது.
மகா கணபதி கோயில்



ஸ்ரீ மகா கணபதி 
                 
சுப்பிரமணியன் செட்டியார் 

செட்டியார் சிலை 2


செட்டியார் சிலை 3

செட்டியார் சிலை 4


13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு 

"கல்வாச நாட்டில் 
எலையாத்தங்குடியான 
குல சேகர புரத்தில் 
பெருமரவூர் உடையார் சாத்தன்
செட்டியார் சுப்பிரமணியன்"  என்ற  கல்வெட்டு வாசகம் ஒரு செட்டியார் சிலையின் மேற்புறத்தூணில் வடிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் உஞ்சனையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்/நகரத்தார்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

 உஞ்சனையை விட்டு அருகிலிருந்த ஊர்களுக்கு வசிக்கச் சென்ற பின்
13ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்ற  இக்கோவில் பராமரிப்பின்றிச் சிதிலமடைந்தது.

இந்நிலையில் உஞ்சனை நாட்டுப் பெரிய அம்பலகாரர் இராம.இராமசாமி அய்யா அவர்கள், நாட்டார்கள் மற்றும் கிராமத்தார்கள்
அனைவரும்
முனைவர் தேவகோட்டை இராமநாதன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்படி தேவகோட்டை  இராமநாதன் அவர்களின்  பெருமுயற்சியால், நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சார்பில் திருஅண்ணாமலை நகரத்தார் உபயதாரர்கள்குழுவின் தலைவர் கோட்டையூர் க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார் அவர்களால்
மிகவும் பழமை வாய்ந்த, தினமும் காலையில் சூரியன் கதிரொளியால் பூசிக்கும்,அதிசயமான உஞ்சனை "மகா கணபதி கோயில்" மிகச்சிறப்பான முறையில் பழமை மாறாமல் திருப்பணி செய்யப்பட்டு, இன்று(12.03.2020) குடமுழுக்கு நடத்தப்பெற்றது.

புதிய கல்வெட்டு 
க.வீ.மு.சொ.நா.சொ.அழகப்பன் செட்டியார்  குடும்பத்தினர், தேவகோட்டை இராமநாதன் மற்றும் நான்.

Kailash PL

Wednesday, March 4, 2020

கல்லங்குடி கம்பர் கோயில்



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 11கி.மீ தொலைவில் உள்ள கல்லங்குடி கிராமம் அருகே அடர்ந்த காட்டின் நடுவில் பழமையான சிவன் கோயில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
கோவில் முகப்பு தோற்றம் 










கம்பர் சிலை 
கவிச்சக்கரவர்த்தி கம்பர் முழு உருவ சிலை
ஒன்று இருக்கிறது. கம்பர் சிலகாலம் இங்கு வாழ்ந்ததாகவும் இங்கிருந்து ஏழு மைல் தொலைவிலுள்ள நாட்டரசன்கோட்டையில் சமாதி அடைந்ததாகவும் இவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.


கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்


இக்கோயிலில் எட்டுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பழமையானது, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216-1238) கல்வெட்டாகும். இக்கல்வெட்டு, இம்மன்னனின் நான்காம் ஆட்சியில் (கி.பி.1220) இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானத்தைத் தெரிவிக்கிறது.
கல்வெட்டுகளின் மூலம் இக்கோயில் பிற்காலப் பாண்டிய மன்னர் மரபினர்களால் கி.பி.13-ஆம் நூற்றாண்டில்(சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டது எனத் தெரியவருகிறது.
மேற்படி கல்வெட்டு விபரங்கள் தினமணி நாளிதழில் வந்தது.

நந்தி சிலை 



சிதிலமடைந்த
கொடுங்கை 









இங்குள்ள கல்வெட்டுகளையும், கம்பரின் முழு உருவச்சிலையையும் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து இது கம்பரின் சிலைதானா என்பதைத் உறுதிசெய்ய வேண்டும் என்பதும், இக்கோயிலை தமிழக அரசு புதுப்பித்துத்தர வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் கோரிக்கையாகும்.


Kailash PL

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...