Followers

Friday, December 24, 2021

திருக்கோயில் திருப்பணியாளர் இல்லம்.

தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலங்களுள் ஒன்றான "திருத்தென்குடித்திட்டை" திருக்கோயில் கல் திருப்பணி செய்த திருப்பணியாளர் பலவான்குடி இராம.கு.இராம.இராமசாமி செட்டியாரின் இல்லம்.







சிறந்த சைவசித்தாந்த வித்தகரான பலவான்குடி இராம.கு.இராம. இராமசாமி செட்டியார், சீர்திருத்த செம்மல் சொ.முருகப்பா உருவாக்கிய சிவநேசர் திருக்கூட்டம் என்ற அமைப்புடன் இணைந்து அதன் சார்பில் கி.பி.1927 முதல் 'சிவநேசன்' என்ற சைவசித்தாந்த வார இதழைத் தாமே ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து 1927 முதல் 1937 வரை நடத்திவந்தார். இவ்விதழ் சிவகங்கை மாவட்டம் பலவான்குடியில் இருந்து வெளிவந்தது. மற்ற சைவ சித்தாந்த இதழ்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, சமகால பிரச்சினைகளை அதிகளவில் பேசுபொருளாக எடுத்துக் கொண்டு செயல்பட்ட ஒரே சைவ இதழாக இது திகழ்ந்துள்ளது. குறிப்பாக, ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிரான கட்டுரைகளை சிவநேசன் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது. அக்காலகட்டத்தில் புகழ் பெற்ற சைவப் பேரறிஞர்கள் சிவநேசனில் எழுதுவதைப் பெருமையாகக் கருதும் அளவுக்கு மாநிலம் தழுவிய அளவில் சிவநேசன் இதழுக்கு பெரும் வரவேற்பும் ஆசிரியர் இராம.கு.இராம.இராமசாமிச் செட்டியாருக்கு பெரும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. 

திருத்தென்குடிதிட்டை திருக்கோயிலில் உள்ள இராம.கு.இராம. இராமசாமி செட்டியார் சிலை.

மேலும் நகரத்தாரின் ஒன்பது கோயில்களுள் ஒன்றாகிய வைரவன் கோயில் புராணத்தை உரைநடை நூலாக்கிய சிறப்பும் இவரையே சாரும். இவர் பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் பலவான்குடியில் இவர் வாழ்ந்த வீட்டை இவரின் வம்சாவளியினர் சீரும் சிறப்புமாக பராமரித்து பேணிக்காத்து வருகி்ன்றனர்.

-பழ.கைலாஷ்
24/12/2021


துதிக்கையில்லா கரிமுகன்

  நடுவாற்று மருதம் பிள்ளையார் சி வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர் கண்டரமாணிக்கம் . இவ்வூரையடுத்த கொங்கரத்தியில் மணிமுத்தாற்றின் ...