Followers

Monday, October 4, 2021

பாரதியின் கடிதம்


1901ஆம் ஆண்டு பாரதி காசியிலிருந்து தன் மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம்.

ஓம்

ஸ்ரீகாசி 
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன் 
சி. சுப்பிரமணிய பாரதி

Source: "பாரதியின் கடிதங்கள்" நூல் - ரா.அ.பத்மநாபன்.

தஞ்சையில் நகரத்தார் கல்வெட்டு:




                        தஞ்சைப் பெரிய கோவில் விநாயகப் பெருமானை வணங்கி நின்றான் ராஜராஜன். இதுபோன்ற சதுர்த்தித்திருநாளாக இருந்திருக்கக் கூடும். விநாயகருக்கு வாழைப்பழ நிவேதனம் நடந்துகொண்டிருந்தது அதைப்பார்த்த மன்னனுக்கு ஏதோ தோன்றியது. பிள்ளையாருக்குப் படைக்க நாளொன்றுக்கு எவ்வளவு வாழைப்பழம் தேவை என்று கேட்டான்.

ஒரு நாளுக்கு 150 பழங்கள் என்றார் குருக்கள். அப்படியானால் வருடத்திற்கு (360 நாள்) 54000 பழங்கள் என்று கணக்கிட்டான். உடனே அருகிலுள்ள அதிகாரிகளை அழைத்து தரமான வாழைப்பழங்களின் விலை என்ன என்று கேட்டான். ஒரு காசுக்கு 1200 பழம் என்றனர். ஆக, வருடத்திற்கு 45 காசுகள் செலவாகும்.

அப்படி ஒவ்வொரு வருடமும் 45 காசுகள் செலவு செய்ய முதலீடு எவ்வளவு செய்ய வேண்டும்?  பெரிய கோவில் வங்கி அதிகாரி ஒரு காசுக்கு அரைக்கால் காசு (1/8) வட்டி என்று தெரிவித்தார். அப்படியானால் 360 காசுகள் முதலீடு செய்தால் அந்த வட்டிக்கு 45 காசுகள் கிடைக்கும் அல்லவா. ஆகவே தன் பங்குக்கு 360 காசுகளை ராஜராஜன் வழங்கினான். அதை தஞ்சை வணிகர்களுக்கு கடனாக வழங்கவும் உத்தரவிட்டான். ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன்படி நாளொன்றுக்கு 150 பழங்கள் விநாயகருக்கு நிவேதனம் செய்வதாக நகரத்தார் ஒப்புக்கொண்டனர். அதைக் கல்வெட்டாக அங்கேயே பொறித்தும் வைத்தான் ராஜராஜப் பெருவேந்தன்.

தகவல்: anchor.fm/krishnan8
Courtesy: Viswanathan Arunachalam

Friday, October 1, 2021

மதுரை 1923-ஆம் வருட கும்பாபிஷேகம்


இது 1923-ஆம் ஆண்டும் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக புகைப்படம்.

(மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த "தேவகோட்டை முத்து.கரு.வெ.அழகப்பச் செட்டியார்" தம் சொந்த பொருட்செலவில் கோயில் முழுதும் பழுது பார்த்து 01.07.1923-இல் கும்பாபிஷேகம் செய்துள்ளார்)


"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...