எங்கள் மூதாதையரான தேவகோட்டை தி.இராம.பழனியப்ப செட்டியார், குழந்தை பாக்கியம் வேண்டி பல புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட்டுவந்துள்ளார், ஒருமுறை மேலக்கொடுமளூர் பற்றி அறிந்து, அங்கு சென்று முருகனை வழிபட்டுள்ளார். அப்போது பதிகம் பாட எண்ணிய பழனியப்ப செட்டியார் சேது சமஸ்தான கவிஞர் ஜவாது புலவரை அனுகியுள்ளார். இஸ்லாமியரான ஜவாது புலவர் அவர்கள், பழனியப்ப செட்டியாரின் விருப்பத்திற்கிணங்க கொடுமளூர் குமரன் பெயரில் "கொடுமளூர் குமரகுருபர முருகன் பதிகம்" எனும் செய்யுளை படைத்துள்ளார். அதனை கொடுமளூர் குமரன் சன்னிதியில் பாடிய பழனியப்ப செட்டியாருக்கு ஆறுமுகன் அருளால் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவரின் வம்சாவளியினர் இன்று தேவகோட்டையில் நாங்கள் நானூறுக்கும் அதிகமான புள்ளிகள்(குடும்பங்கள்) வாழ்ந்துவருகிறோம்.
ஜவாது புலவர் குறித்து தி இந்து ஆங்கில நாளிதழில்(The Hindu 19/04/24) வந்த கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்.
- பழ.கைலாஷ்
No comments:
Post a Comment