Followers

Thursday, September 25, 2025

இராமேஸ்வரத்தில் தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணி

-பழ.கைலாஷ் -


அழ.அரு.இராமசாமி செட்டியார் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். இராமநாதபுரம் ஜமீன் நீதிமன்ற நிர்வாகத்தில் இருந்தபோது, மைனர் பாஸ்கரசேதுபதிக்கு தேவையான பொழுதெல்லாம் பண உதவி செய்துள்ளார். சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் வரை 1880கள் வாக்கில் கடன் கொடுத்திருக்கிறார். 

அழ.அரு.இராமசாமி செட்டியார்


பாஸ்கர சேதுபதி மேஜரானபோது அவருடைய உறவினர் ஒருவர், "பாஸ்கர சேதுபதி பெரிய செலவாளி, தேவகோட்டை இராமசாமி செட்டியாரிடம் பல லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். எனவே அவரிடம் ராஜியத்தை ஒப்படைக்கக்கூடாது" என்று தடை உத்தரவு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அந்தவழக்கில் செட்டியார் சாட்சியாக விசாரிக்கப்பட்ட பொழுது, “ராஜாவை உபசரிப்பது எங்கள் கடமை. அவரை என்றும் உபசரித்து வருவோம் நாங்கள் அவருக்குக் கடன் எதுவும் கொடுக்கவில்லை" என்று கூறியதோடு அதற்கு ஆதாரமாக தம்முடைய கணக்குப் புத்தகங்களையும் நீதி மன்றத்தில் காட்டினார், அதில் பாஸ்கர சேதுபதியிடம் கொடுத்த தொகைகள் மன்னரது பெயரில் பற்று வைக்கப்படாமல், "இராம தனது பற்று" என்று இராமசாமி செட்டியார் பெயரிலேயே பற்று வைக்கப்பட்டிருந்தது. ஆகையால் மனு த‌ள்ளுபடி செய்யப்பட்டது. பாஸ்கர சேதுபதியிடமே ராஜியம் ஒப்படைக்கப்பட்டது.


ராஜியம் கிடைக்க காரணமாக இருந்த தேவகோட்டை அழ.அரு.இராமசாமி செட்டியாருக்கு தேவகோட்டையை சுற்றியுள்ள 22 1/2 கிராமங்களை வழங்கி "தேவகோட்டை ஜமீன்" என்கிற அந்தஸ்த்தை வழங்கினார் மன்னர் பாஸ்கர சேதுபதி.

லெட்சுமி விலாஸ்
(தேவகோட்டை ஜமீன்தார் மாளிகை)


தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். உப்பூர், இராமேஸ்வரம், உத்திரகோசமங்கை, காளையார்கோயில், ஆவுடையார்கோயில், பெரியநயினார்கோயில், திருப்பாண்டிக்கொடுமுடி, வைகல், மதுரை, திருப்பரங்குன்றம், தேவகோட்டை, காரைக்குடி மற்றும் கோவிலூர் என தேவகோட்டை ஜமீந்தார் திருப்பணி செய்திருக்கும் தலங்கள் ஏராளம்.


தேவகோட்டையின் முதல் ஜமீன்தாரான அழ.அரு.இராமசாமி செட்டியாரால் 1890களில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில் திருப்பணி தொடங்கப்பட்டது. அவருக்கு பின் அவரின் நான்கு மகன்கள் அருணாச்சலம் செட்டியார், சொக்கையா செட்டியார், வெள்ளையன் செட்டியார், நாரயணன் செட்டியார் ஆகியோரால் தொடர்ந்து திருப்பணிகள் செய்ப்பட்டுள்ளன.


இராமேஸ்வரம் கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணி மிக விரிவானது. இவர்களால் கோயிலின் பெரும் பகுதி சீர்திருத்தப்பட்டுள்ளது, இராமநாதசுவாமி சன்னிதியை சுற்றி பழுதடைந்திருந்த பழைய முதல்பிரகாரம் முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிதாக பெரிய முன்மண்டபத்துடன் முதல்பிரகாரம் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது, பர்வதவர்த்தினி அம்மன் பழைய சன்னிதி முற்றிலுமாக அகற்றப்பட்டு புதிய கருவறை அர்த்தமண்டபம் மஹாமண்டபத்துடன் பிரகாரம் கட்டப்பட்டுள்ளது, கோயிலின் இரண்டாம்பிரகாரத்தின் பெரும்பகுதி கட்டப்பட்டுள்ளது, சேது மாதவர் சன்னிதி உள்ளிட்ட சில சன்னிதிகள் மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளன, கோயிலின் பல பகுதிகளில் தலவரிசைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.

ஜமீன்தார் திருப்பணிக்கு முன் சுவாமி சன்னதி முதல் பிரகாரம்


மேலும் கோயிலின் கிழக்கு கோபுரம் முழுமையாக கட்டப்படாமல் இருந்துள்ளது. இந்த கோபுரம் கி.பி.1630களில் தளவாய் சேதுபதி மன்னரால் கட்டத் தொடங்கப்பட்டது. ஆனால் அது தடைப்பட்டது. பின்னர் வந்த சேதுபதி மன்னர்கள் பலர் கோயிலை விரிவுபடுத்தி வரும் சமயம் இந்த கோபுரத்தை எழுப்பும் பணியையும் மேற்கொண்டனர். ஆயினும் இது முடிவடையவில்லை. சுமார் இருநூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் கிழக்கு கோபுரம் முழுமையாக ஒன்பதுநிலை கோபுரமாக கட்டிமுடிக்கப்பட்டது

கிழக்கு கோபுரம் முழுமையடைந்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம்


கோயில் திருப்பணிக்கு வேண்டியகற்கள் அம்பாசமுத்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இரயில் வசதி இல்லாத அக்காலத்தில் மண்டபம் பகுதி இஸ்லாமியர் உதவியுடன் "இராமநாதர்" மற்றும் "பர்வதவர்த்தினி" என்ற பெயருடைய இரண்டு படகுகள் மூலம் கற்களைக் கொண்டு வந்து இராமேஸ்வரத்தில் சேர்த்துள்ளனர்.


தேவகோட்டை ஜமீந்தார் இராமேஸ்வரம் கோயில் திருப்பணிகள் செய்து வந்த காலத்தில், கோயில் நிர்வாகம் தொடர்பாக பாஸ்கர சேதுபதி மன்னருக்கும் பண்டாரத்திற்கும் வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அப்போது 1901ஆம் ஆண்டு நீதிமன்றம் ஜமீந்தார் அழ.அரு.இராம.அருணாசலம் செட்டியாரை கோயில் மேலாளராக நியமித்தது. பின்னர் 1912ஆம் ஆண்டு அரசாங்க போட்ட ஸ்கீம் படி கோயில் நிர்வாகத்தை இராமநாதபுர சேதுபதி மன்னருடன் தேவகோட்டை ஜமீன்தாரும் இணைந்து பார்த்து வந்துள்ளனர்.


இராமேஸ்வரம் கோயிலுக்காக தேவகோட்டை ஜமீன்தார் பற்பல நகைகளும் வாகணங்களும் செய்து கொடுத்துள்ளனர்.


கி.பி 1901 மற்றும் கி.பி 1947ஆம் ஆண்டுகளில் சேதுபதி மன்னர்கள் தலைமையில் தேவகோட்டை ஜமீந்தாரால் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றுள்ளது.


×-×-×



Sunday, September 21, 2025

மெட்ராஸ் மேயர் மூவர்.

 ஒரு பழைய புகைப்படம்.



மெட்ராஸ் கவர்னர் லார்ட் ஜார்ஜ் கோஷெனுடன் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மற்றும் அவரது மூன்று மகன்கள் உள்ளனர்.


மூன்று மகன்கள்:-

1. ராஜா சர் முத்தையா செட்டியார்

2. மேயர் இராமநாதன் செட்டியார் 

3. M.A.சிதம்பரம் செட்டியார்

இவர்கள் மூவருமே மெட்ராஸ் மேயராக இருந்தவர்கள். மெட்ராஸின் முதல் மேயர் முத்தையா செட்டியார். உலகிலேயே உடன்பிறந்த சகோதரர்கள் அனைவருமே(மூவர்) ஒரு நகரத்தின் மேயராக இருந்தவர்கள் இவர்கள் மட்டுமே!.  

ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் சகோதரரும் இந்தியன் வங்கி நிறுவனருமான திவான் பகதூர் இராமசாமி செட்டியாருக்கு ஆன் வாரிசு இல்லாததால், அண்ணாமலை செட்டியார் தனது இரண்டாவது மகன் இராமநாதனை தனது சகோதரருக்கு சுவீகாரம் கொடுத்துவிட்டார்(தத்துக் கொடுத்துவிட்டார்).

M.A.சிதம்பரம் செட்டியார் பிசிசிஐ (BCCI)யின் தலைவராக இருந்தவர். இவரது முயற்சியால் உருவான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

- பழ.கைலாஷ்.

Photo Courtesy : Valliappan Ramanathan, Devakottai.

Wednesday, September 17, 2025

THE DEVAKOTTAI ZAMINDAR

- Kailash PL -



          The Devakottai Zamindar family is considered one of the most notable among the Nattukottai Nagarathars. AL.AR. Ramasamy Chettiar was the first Zamindar of Devakottai.


AL.AR.Ramasamy Chettiar 

As a prominent banker AL.AR. Ramasamy Chettiar was a close friend of King Bhaskara Sethupathi of Ramanathapuram. While the Ramanathapuram Zamin was under court administration, Chettiar provided crucial financial assistance to the minor Bhaskara Sethupathi. Around 1870A.D., he had lent the king approximately three and a half lakh rupees.


​When Bhaskara Sethupathi came of age, one of his relatives filed a case in the Madras High Court seeking a stay order, stating, "Bhaskara Sethupathi is a big spender and has borrowed several lakhs from Ramasamy Chettiar of Devakottai. Therefore, the kingdom should not be handed over to him". When Chettiar was examined as a witness in the case, he stated, "It is our duty to host the king. We will always do so. We have not given him any loan". As proof, he showed his account books in court. The amounts given to Bhaskara Sethupathi were not debited in the king's name but were instead listed as expenditures made in Ramasamy Chettiar's own name. The petition was thus dismissed, and the kingdom was handed over to Bhaskara Sethupathi.


​In gratitude for helping him regain his kingdom, King Bhaskara Sethupathi granted AL.AR. Ramasamy Chettiar, Twenty two and a half villages around Devakottai and and bestowed upon him the official status of "Devakottai Zamindar."


The Devakottai Zamindar Family had banking business and spinning mills. They traded in East Asian countries such as Burma, Sri Lanka, Malaysia, Singapore, and Vietnam. Notably, A.M.Murugappa Chettiar, founder of the great Murugappa Group, worked as an agent of Zamindar initially.


The Devakottai Zamindars were renowned patrons of temple renovation, undertaking extensive work in numerous sacred places, including Uppur, Rameswaram, Uthirakosamangai, KalaiyarKovil, ThirupandiKodumudi, AvudaiyarKovil, PeriyaNainar Kovil, Vaigal, Madurai, Thirupparankundram, Devakottai, Karaikudi and Koviloor.


​The family also served as trustees for major temples, including the Madurai Meenakshi Amman Temple, the Rameswaram Ramanathaswamy Temple, and the KalaiyarKovil Kaleeswara Temple.


The Devakottai Zamindars were also pioneers in public service. When Rajaji Hospital in Madurai was first constructed during the British era, the Devakottai Zamindar family funded the construction of its very first building. They went on to establish a veterinary hospital, school, and ponds in Devakottai. Notably, they founded Chettinad's first girls' elementary school at their palace in Devakottai.They also provided a large piece of land to the government for the construction of a TB hospital in Somanathapuram.


The Devakottai Zamin has three mansions in Devakottai. The first is their ancestral home, which is about 250 years old. The second, "Swarnavalli Vilas," was built around 1915A.D., and the third, "Lakshmi Vilas," was built in 1928A.D.


This article gives a short history of the Devakottai Zamindars. There are many more historical facts, but i have summarized only a few here.

"மணிமகுடத்தில் ஒரு மாணிக்கம்!" காசி - இராமேஸ்வரம் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

- பழ.கைலாஷ் -


முதல்வர் திரிவேணித்தீர்த்தத்தை வழங்கும் காட்சி
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுடன் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞானதேசிக சுவாமிகள், C.RM.அருணாச்சலம் செட்டியார், விஸ்வ பூஷன் மிஸ்ரா.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் பாரத தேசத்தில் வடக்கே காசி முதல் தெற்கே சேது வரை பற்பல புண்ணிய தலங்களில் பற்பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. நகரத்தார் செய்த மற்றும் செய்து வரும் திருப்பணிகளுள் மணிமகுடமாய் திகழ்வது காசி திருத்தலத்தில் காசிவிஸ்வநாதருக்கு நாள்தோறும் மூன்று வேளை செய்து வரும் பூஜையே! இது சுமார் 250 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகவி பாடுவார் முத்தப்பர்,

"காசியிலும் சேதுவிலும் கனகத் தருமமிட்டு

வாசமுள்ள ஈசர் பதம் மனம் பணிந்தார்"

என்று அன்றே நகரத்தார் வாரணாசியிலும் இராமேஸ்வரத்திலும் செய்த திருப்பணிகளை குறிப்பிட்டு பாடியுள்ளார்.


இன்று நகரத்தார்(ஏஎல்.ஏஆர் கட்டளை) சார்பில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள புனிதநீர் பரிமாற்றம், மணி மகுடத்தில் ஒரு மாணிக்கமாக திகழ்கின்றது.


காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் கோடித்தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கையில் நீராடி மணலை கரைத்து, காசி விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பிரயாகையில் திரிவேணி தீர்த்தம் எடுத்து வந்து, இராமநாதருக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவுசெய்வார்கள்.


விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாக கருதப்படுகிறது.


கடந்த பல ஆண்டுகளாக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை(AL.AR Trust) சார்பில் இராமேஸ்வரத்தில் இராமநாதருக்கு தினம்தோறும் மாலை திரிவேணித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. தற்போது இதன் புதிய முகமாக காசியில் காசிவிஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யும் மரபு ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளையுடன் ஏஎல்.ஏஆர் கட்டளை இணைந்து திரிவேணி மற்றும் கோடித்தீர்த்தத்தை பரிமாறிக்கொள்ளும் ஆன்மீக வழிபாட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.


கடந்த ஜூலை 28ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயிலில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாண்புமிகு யோகி ஆதித்யநாத் அவர்களால் திரிவேணித்தீர்த்தம் கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள் முன்னிலையில் ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் அவர்களிடம் வழங்கப்பட்டது.


ஆகஸ்ட் 9ஆம் தேதி காசி விஸ்வநாதருக்கு இராமேஸ்வரத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கோடித்தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வில், இதற்கு மிகமுக்கிய காரணகர்த்தராக திகழ்ந்த கோவிலூர் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ நாராயண ஞான தேசிக சுவாமிகள், ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வ பூஷன் மிஸ்ரா, ஏஎல்.ஏஆர் கட்டளையின் பிரதிநிதி சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார், வாரணாசி ஆட்சியாளர் இராஜலிங்கம் இ.ஆ.ப மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோடித்தீர்த்தத்தை காசி விஸ்வநாதர் கோயிலில் ஒப்படைக்கும் காட்சி..

கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்யும் காட்சி.


தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தார் பெரும் திருப்பணியாளர்கள். சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் தேவகோட்டை ஜமீந்தார் செய்திருக்கும் திருப்பணிகள் ஏராளம்.


19-ஆம் நூற்றாண்டு இறுதியில் இராமேஸ்வரம் கோயில் திருப்பணியை தேவகோட்டை ஜமீந்தார் அழ.அரு.இராமசாமிச் செட்டியார் தொடங்கினார், அவருக்கு பின் அவரது மகன்களால் திருப்பணி தொடர்ந்து நடைபெற்றது, பழுதடைந்திருந்த இராமநாத சுவாமி சந்நிதியின் மஹா மண்டபம், முதல் திருச்சுற்று, இரண்டாம் திருச்சுற்றின் பெரும்பகுதி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதி ஆகியன முற்றிலுமாக பிரித்து புதிய கருங்கற்களால் கட்டப்பெற்றது. இடிந்து கிடந்த கிழக்கு கோபுரம் மீண்டும் எழுப்பப்பெற்றது, மேலும் கோயில் முழுமையும் பழுதுபார்த்து கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது.


தற்போது தேவகோட்டை ஜமீந்தாரின் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசியில் தொடங்கியிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்த சி.ஆர்எம்.அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஏப்ரல் மாதம் கோவிலூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த காசி விஸ்வநாதர் கோயில் சி.ஈ.ஓ விஸ்வ பூஷன் மிஸ்ரா, கோவிலூர் சுவாமிகளுடன் இராமேஸ்வரம் வந்து நம் நகரவிடுதியில் தங்கியிருந்த போது, கோவிலூர் சுவாமிகள் என்னை மிஸ்ரா அவர்களிடம் அறிமுகப்படுத்திவைத்தார்கள். நான் எங்கள் குடும்பத்தார் இராமநாதசுவாமி கோவிலில் செய்திருக்கும் திருப்பணிகளையும், எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை பற்றியும் திரிவேணித்தீர்த்தத்தால் நாங்கள் அபிஷேகம் செய்துவருவது குறித்தும் கோடித்தீர்த்தம் குறித்தும் எடுத்து கூறினேன். பின்னர் நான் கோடித்தீர்த்தத்தையும் விபுதி பிரசாதத்தையும் மிஸ்ரா அவர்களிடம் கொடுத்தேன். அன்புடன் பெற்றுக்கொண்ட அவர் காசி சென்றதும், காசி விஸ்வநாதருக்கு அந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அதன் வீடியோ காட்சியை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதலங்களில் பகிர்ந்து செய்திக்குறிப்பில் கோடித்தீர்த்தத்தின் விஷேசம் குறித்தும், விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபு முன்பு இருந்தது குறித்தும் எழுதியிருந்தார். அவரின் ஆர்வம் என்னை வியக்கவைத்தது. இராமேஸ்வரத்தில் நாம் செய்வது போல் காசியிலும் புதிதாய் தொடங்கலாமே என சிந்தித்து கோவிலூர் சுவாமிகள் மூலமாக மிஸ்ரா அவர்களை அணுகினேன். எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் காசி விஸ்வநாதருக்கு தினம்தோறும் ஒருவேளை கோடித்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்ய அனுமதி வேண்டி மிஸ்ரா அவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். உடனே அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்து அவர்கள் எங்களுக்கு திரிவேணி தீர்த்தத்தை அனுப்புவதாகவும் நாங்கள் அவர்களுக்கு கோடித்தீர்த்தத்தை அனுப்ப வேண்டியும் விஸ்வநாதருக்கு கோடித்தீர்த்தத்திலும் இராமநாதருக்கு திரிவேணித்தீர்த்தத்திலும் அபிஷேகம் செய்யும் மரபை மீண்டும் தொடங்குவோம் என ஒப்புதல் கடிதம் அனுப்பினார்கள்." என்றார்


மேலும் அருணாச்சலம் செட்டியார் கூறுகையில் "கடந்த ஜூலை 28ஆம் தேதி காசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கோவிலூர் சுவாமிகளுடன் நான் எங்கள் ஏஎல்.ஏஆர் கட்டளை சார்பில் திரிவேணித்தீர்த்தத்தை பெற்றுக்கொண்டேன். பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி இராமேஸ்வரம் கோயிலில் கோடித்தீர்த்தத்தை வைத்து பூஜை செய்து, கோவிலூர் சுவாமிகள் உதவியுடன் காசிக்கு அனுப்பினோம். காசியில் கோவிலூர் சுவாமிகள் நடத்தி வரும் அன்னஷேத்திரத்தில் தீர்த்தத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி தீர்த்தத்தை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துவந்து கோவிலூர் சுவாமிகளுடன் நான், விஸ்வ பூஷன் மிஸ்ரா, வாரணாசி கலெக்டரான தமிழர் இராஜலிங்கம் ஆகியோர் கோடித்தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தோம்." என்றார்.




நமது செட்டிநாடு இதழ் - Aug 2025



செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...