Followers

Monday, December 21, 2020

பட்டமங்கலம்

பட்டமங்கலம் - குரு தலம்.

ஞானத்திற்கு உரிய கடவுளான தென்முகக்கடவுள் எனும் தட்சணாமூர்த்தி அனைத்து தலங்களிலும் தெற்கு நோக்கியே காட்சியளிப்பார், ஆலங்குடி, திருவாரூர் போன்ற சில தலங்களில் மட்டுமே தட்சணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. உலகிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ள ஒரே தலம் பட்டமங்கலம் எனும் பட்டமங்கை.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 8கி.மீ தொலைவில் உள்ளது பட்டமங்கலம்.

செட்டிநாட்டு 76 ஊர்களில், மாணிக்கவாசகர் பாடல் பெற்ற சிறப்புடைய ஒரே ஊர் பட்டமங்கலம்.

ஆதி காலத்தில் இவ்வூரில் ஒர் ஆலமரத்தின் கீழ், கார்த்திகைப் பெண்டிர் அறுவருக்கும் சிவபெருமான் ஆசிரியராக எழுந்தருளி அட்டமாசித்திகளின் இயல்பினை அறிவித்தருளினார் என்ற செய்தியைத் திருவாசகத்தின் கீர்த்தித் திருவகவல்,

"பட்ட மங்கையிற் பாங்காய் இருந்தங்கு 
அட்டமா சித்தி அருளிய அதுவும்

எனக் குறிப்பிடுகிறது. 

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வூர் ஆதி.அ.வீர.அடைக்கப்பச் செட்டியார் அட்டமாசித்தி ஆலமரத்தின் கீழ் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அட்டமாசித்திகள் அருளிய தட்சிணாமூர்த்தி பெருமானுக்கு கற்றளி அமைத்து, அருகே மீனாட்சி உடனாய சுந்தரேசுவரர் திருக்கோயிலை புதிதாக கட்டி 19/05/1930இல் குடமுழுக்கு செய்துள்ளார். இன்று வரை அவர்தம் வழிமுறையினர் சீரும் சிறப்புமாக பராமரித்து வருகின்றனர். பக்தர்களிடம் இவர்கள் எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை.

இந்த கோயிலில் உண்டியல் கிடையாது, சிறப்பு தரிசனம் கிடையாது, எந்தவித கட்டணமும் கிடையாது என்பது சிறப்பு.

பழம் பழுத்துக் கீழே விழுந்தால், மீண்டும் தானாகவே சென்று மரத்தில் ஒட்டிக் கொள்ளும் தனித்தன்மையுடைய ஏறழிஞ்சிமரம் ஒன்று அட்டமாசித்தி ஆலமரத்தின் அருகே உள்ளது இது இத்தலத்தில் மற்றொரு சிறப்பு.

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...