Followers

Monday, December 21, 2020

பூங்குன்ற வேலங்குடி

பாண்டியநாட்டின் உட்பகுதிகள் பல, அவற்றுள் ஒன்று பூங்குன்றநாடு. இந்நாடு 24 1/2 கிராமங்களை உள்ளடக்கியதாகும். அவற்றுள் ஒன்று வேலங்குடி. இவ்வூர் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து  கண்டவராயன்பட்டி வழியாக 12கி.மீ தொலைவில் உள்ளது.

பூங்குன்ற நாட்டின் தலைநகர் மகிபாலன்பட்டி. மகிபாலன் என்பவர் இந்நாட்டை ஆண்ட அரசர்களுள் ஒருவர்.

பூங்குன்ற வேலங்குடியில் சிவகங்கை சமஸ்தானதிற்கு உட்பட்ட உருத்திரபதியீசுவரர் திருக்கோயில் உள்ளது.

மிகத் தொன்மையான இக்கோயில் சிதிலமடைந்திருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரார் கோயிலை முற்றிலுமாக பிரித்து, பழைய கற்களை பாலீஷ் செய்து மீள் கட்டுமானம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர், தற்போது சில காரணங்களால் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கோயிலை முற்றிலுமாக பிரிக்காமல், சிதிலமடைந்திருந்த பகுதிகளை மட்டும் பழுதுபார்த்திருந்தால். பல கல்வெட்டுகளும் தொன்மையும் பாதுகாக்கப்பட்டிருக்கும்!

(புகைப்படங்கள் 13/12/2020 அன்று எடுக்கப்பட்டது)

No comments:

Post a Comment

நகரத்தாரும் இராமாயணமும்

              இ ராமாயணம், மகாபாரதம் இவை இரண்டும் இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசங்கள். புராணம் என்றால் புராதனமானது என்று பொருள். ஏதோ ஒரு காலத்...