Followers

Monday, January 27, 2025

சுதந்திரப்போராட்ட வீரர் D.R.அருணாசலம்

 




D என்பது தேவகோட்டை, R என்பது இராமநாதன் செட்டியார்


D.R.அருணாசலம் அவர்களின் தந்தை இராமநாதன் செட்டியார் திருகாளஹஸ்தி கோயில் திருப்பணியாளர்.


தேவகோட்டையில் பெரும் செல்வ குடும்பத்தில் பிறந்த D.R.அருணாசலம், மகாத்மா காந்தி மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.


 1941-ல் தனிநபர் சத்தியாகிரகம் செய்தமைக்காகக் கைது செய்யப்பட்டார். பின்னர் 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். இவரது தூண்டுதலில் இவரது நண்பர்களால் தேவகோட்டை நீதிமன்றம் கொளுத்தப்பட்டது.

 மதுரை, அலிப்புரம், வேலூர், தஞ்சாவூர் சிறைச்சாலைகளில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். 


இந்திய விடுதலைக்குப்பின், இந்திய அரசு இவரது நாட்டுத் தொண்டைப் பாராட்டித் தாமிரப்பட்டயம் அளித்துள்ளது. 


தேவகோட்டையில் 1941-ல் மாபெரும் தமிழிசை மாநாட்டை இராஜா சர். அண்ணாமலை செட்டியார் தலைமையில் இவர் முன்னின்று நடத்தினார்.


லூயிஃபிஷர் எழுதிய 'நான் கண்ட காந்தி', ஜி. ராமச்சந்திரன் எழுதிய 'காந்திஜி வாழ்க்கையில் சில ரசமான சம்பவங்கள்' முதலிய சில நூல்களை ஆங்கிலத்திலிருந்தும் சில நூல்களை இந்தியிலிருந்தும் இவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 


- பழ.கைலாஷ்

No comments:

Post a Comment

செட்டிநாட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்! மீஸெல் அட்மென்ட் - பெர்னார்ட் டிராகன் சிறப்பு பேட்டி.

- பழ.கைலாஷ் -                       செ ட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பலர் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள்,...